குளச்சல் லியோன் நகரை சேர்ந்தவர் சுதாலிஸ் (50). மீனவர். விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று (ஜூலை 18) மாலை படகு பராமரிப்பு பணி முடிந்து வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு சென்றார். அப்போது திடீரென வழுக்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு குளச்சல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சுதாலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.