புதுக்கடை அருகே பிலாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் ஜாண் (31). இவர் பால் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபி தேவபிள்ளை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அபினேஷ் ஜாண் பைக்கில் புதுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை சுபி தேவபிள்ளை தடுத்து நிறுத்தி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த அபினேஷ் ஜாண் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் சுபி தேவபிள்ளை மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.