குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கடந்த மாதம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு இந்த கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும்.
மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.