கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திப்பிறமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்து பேசினார். பின்னர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு சேவைகளை கேட்டறிந்தார். இந்த முகாமில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கிள்ளியூர் தாலுகா பெறுநர் ஈஸ்வரநாதன் மற்றும் 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.














