வாவறை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (42). கூலித் தொழிலாளி. இவர் நேற்று (ஜூலை 14) நடைக்காவு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது, விஜில் என்பவர் மது வாங்கிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது ஜஸ்டின் மீது விஜில் மோதியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜில் உட்பட 4 பேர் சேர்ந்து ஜஸ்டினைத் தாக்கி, மது பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். காயமடைந்த ஜஸ்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விஜில் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.