களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பாறசாலை மகாதேவர் கோயிலில் உழவாரப் பணி நடந்தது. நாகர்கோவில் விஸ்வாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் சிவ தொண்டர்கள் பங்கேற்று, கோயில் சுற்றுப்பகுதியை தூய்மைப்படுத்தினர். கோயில் வெளிப்பகுதி சுற்றுச்சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள லட்சதீப விளக்குகளையும் தூய்மைப்படுத்தினர். அமைப்பின் தலைவர் ஐயப்பன், அமைப்பாளர் செல்வநாயகம் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவ தொண்டர்கள் இந்தப்பணியில் ஈடுபட்டனர். உழவாரப் பணி நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது.