கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் பகுதியில் ஒரு சில ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் அதிகாரிகளுடன் நேற்று (ஜூலை 10) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரிசி மூடைகளில் அரிசியின் தரத்தை பரிசோதனை செய்து தரமான அரிசி விநியோகம் செய்வது உறுதி செய்தார். அரிசி மூடைகளில் எடையினையும் அவர் சரிபார்த்தார்.














