களியக்காவிளை பேரூராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோக ஊழியர்களாக பிபின் ஷாஜி மற்றும் ஆல்பன் ஆகியோரும், மின் உதவியாளராக எபனைசரும் பணியாற்றி வருகின்றனர். மற்ற பேரூராட்சிகளில் முறைப்படி 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறப்பு நிலைக்கான ஊதியம் வழங்க ஆணை வழங்கி பல மாதங்கள் ஆகியும் களியக்காவிளை பேரூராட்சியில் ஊதியம் வழங்கவில்லை. இந்த நிலையில் பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர்.