புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.














