இரணியல் அருகே மொட்டவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44) வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே வசித்து வரும் வியாபாரி கோபாலன் (50) என்பவருக்கும் சுமதிக்கும் முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.
கோபாலன் நேற்று (ஜூலை 8) சுமதிக்கு ஆபாச சைகைகள் காட்டி, வெட்டுக்கத்தியால் வெட்ட முயன்றார். ஆனால் வெட்டு சுமதியின் கணவரின் தம்பி ரஜினிகாந்த் என்பவருக்கு விழுந்து பலத்த காயமடைந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபாலனை கைது செய்தனர்.














