புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (64). கடல் தொழில் செய்து வந்தார். கடந்த 6 மாதமாக வேலை இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று காலை அந்தோணி பிள்ளை மனைவி மரியபுஷ்பம் துணி துவைப்பதற்காக அருகில் உள்ள ஆற்றிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்தோணி பிள்ளை வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிறிது கழிந்து வீடு வந்த மனைவி சம்பவத்தை கண்டு, புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














