நித்திரவிளை அருகே, காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பாக நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 68 குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயன் தலைமை வகித்தார். செயலாளர் சுகன்யா, பொருளாளர் சஜின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மகேஷ், துணை செயலாளர் ததேயுஸ் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.