கொல்லங்கோடு பகுதி சேர்ந்தவர் அருள் வின்சி (27) அதே பகுதி சேர்ந்த மீனா (27). இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவ தினம் இருவரையும் கடை உரிமையாளர் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்து, உரிமையாளரும் அவரது மகனும் சேர்ந்து 2 பெண்களிடம் தகாதவாறு நடந்துகொண்டனர். பின் அருள்வின்சி அணிந்திருந்த 15 பவுன், மீனாவின் 9 பவுன் நகைகளை மிரட்டி பறித்ததாக தெரிகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் 2 பெண்களை மீட்டு கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.