திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஒருவர் சடலம் மிதந்தது. திருவட்டார் போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தவர் காணாமல் போன பொன்ராஜ் என்பது தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.