குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. நேற்று இவர் அங்குள்ள வங்கிக்குச் சென்று தான் அடமானம் வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டு, மற்றும் ரூ. 10 ஆயிரத்தை பையில் வைத்து பஸ்ஸில் ஏறி அவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் சென்ற பின் நகை பணம் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து ஸ்டெல்லா சரோஜம் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














