ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு

0
252

குமரி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தேசிய சுகாதார பணி நிர்வாக ஆலோசகர் ரத்னகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் பிரசவ முன்கவனிப்பு பிரிவு, ஸ்கேன் பிரிவு, பிரசவ வார்டு, பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு, சீமாங் தீவிர சிகிச்சை பிரிவு, ரத்த சேமிப்பு பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரபாகரன், இணை இயக்குனர் மருத்துவபணிகள் சகாயஸ்டீபன்ராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here