“இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்து கொண்டதால்…” – ட்ரம்ப் விளக்கம்

0
101

இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்துகொண்டதால் வலுவான மொழியைப் பயன்படுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்

நெதர்லாந்தின் தி ஹாக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இஸ்ரேலும் ஈரானும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு குழந்தைகளைப் போல நடந்துகொண்டார்கள், அவர்களுக்குள் ஒரு பெரிய சண்டை நடந்தது. அவர்கள் நரகத்தைப் போல சண்டையிட்டார்கள். நீங்கள் அவர்களை உடனே தடுக்க முடியாது. அவர்கள் சுமார் இரண்டு, மூன்று நிமிடங்கள் சண்டையிட வைத்து, பின்னர் அவர்களைத் தடுப்பது எளிது” என்று கிண்டலாக பேசினார்.

அப்போது நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே குறுக்கிட்டு, “அப்பா என்பவர் சில நேரங்களில் வலுவான மொழியைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “சில சமயங்களில் குழந்தைகளை சரியான பாதையில் கொண்டுவர நீங்கள் வலுவான மொழியைப் பயன்படுத்த வேண்டும். அப்போது ஒரு குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இஸ்ரேலும் ஈரானும் நேற்று போர் நிறுத்தத்துகுக்கு ஒப்புக்கொண்டபோதிலும், அவ்விரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசிக்கொண்டன. இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், தொலைக்காட்சி நேரலையில் காட்டமான தொனியில் பேசினார். இதனையடுத்து, படிப்படியாக இரு தரப்பும் தாக்குதல்களை குறைத்துக்கொண்டன என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here