குளச்சல் தொகுதி, வில்லுக்குறி கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியம் மூலமாகவும் மொட்டு காளான் வளர்ப்பு அலகு நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அலகின் மூலம் தினசரி 300 முதல் 500 கிலோ வரை காளான் அறுவடை செய்யப்படுகிறது. நிலையத்தை இன்று குமரி கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார். அலுவலர் விஜயன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.














