தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் மீது தக்கலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய கேட்டும், காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் பத்மநாபபுரம் வழக்கறிஞர்கள் இன்று கோர்ட் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் முடங்கியது.