களியக்காவிளை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அஜ்மல் (24) என்பவர் சப்ளையராக வேலை செய்து வருகிறார். நேற்று கேரள பகுதியைச் சேர்ந்த ஷாபி (19) என்பவர் ஓட்டலுக்கு வந்தார். திடீரென அஜ்மல் இடம் தகராறு செய்தார். ஹோட்டல் உரிமையாளர் சமாதானம் செய்துள்ளார். எனினும் ஆத்திரத்தில் இருந்த ஷாபி கேரளா பகுதியைச் சேர்ந்த அருள் (20) ஆனந்த் (19) மற்றும் கண்டால் தெரியும் நபர் ஆகியோருடன் மீண்டும் ஓட்டலுக்கு சென்று அங்கிருந்த அஜ்மலை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். களியக்காவிளை போலீசார் ஷாபி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.