பேச்சிப்பாறை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் பேச்சிப்பாறையில் நேற்று மாலை நடைபெற்றது. திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், – கட்சியை வலுப்படுத்த தமிழக அரசு திட்டங்களை வீடு வீடாக சென்று எடுத்துக் கூற வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். என்று பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.