வில்லுக்குறி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். தற்போது அந்த பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருபவரை 2-ம் திருமணம் செய்து மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சம்பவ தினம் பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீட்டுக்கு வரவில்லை. தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். மாணவி காவல் நிலையத்தில் சரணடைந்து, தாயின் 2-வது கணவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறினார். போலீசார் ஆக்கர் கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.