தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் நந்துமோன் என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நந்துமோன் வழக்கை வாபஸ் பெற கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாலிபரை கைது செய்தனர்.