கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி வருகிறது. நேற்று (ஜூன் 19) தெலங்கானாவில் இருந்து 2600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. 42 வேகன்களில் வந்த அரிசி மூட்டைகள், லாரிகள் மூலம் பள்ளிவிளை மத்திய உணவுப் பொருட்கள் கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.