கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா இன்று காலை நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ தலைமையில், தனது சொந்த நிதியில் இருந்து 55 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து கூறுகையில், – காங்கிரஸ் ஜனநாயக கட்சி. வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்போம் என கூறினார். நிகழ்ச்சியில் மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.