குமரியின் முக்கிய மாநில நெடுஞ்சாலை இரணியல் – திங்கள் நகர் – திக்கணங்கோடு சாலை பல இடங்களில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்டதால் பல இடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்த தமிழ்நாடு அரசு ரூ 7. 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து பணி தொடக்க விழா நடந்தது. இரணியல் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பிரின்ஸ் எம்எல்ஏ தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் பணியை துவக்கி வைத்தார். குமரி மாவட்ட கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ், காங்கிரஸ் தலைவர் கே டி உதயம் உட்பட காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.