வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உழவரைத் தேடி வேளாண்மை என்ற முகாம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையினர் சார்பில் முஞ்சிறை வட்டாரம் பைங்குளத்தில் நேற்று நடந்தது. முகாமினை வேளாண்மை துறை, கால்நடை துறை, கூட்டுறவு துறை, மீன்வளத்துறை மற்றும் வேளாண் வணிக துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடைய பேசினர்.
இந்த முகாமல் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் முஞ்சிறை வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தோட்டக்கலை துறை இயக்குனர் ஷீலா ஜான் தலைமை வகித்தார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.