தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் அருள் சகாய சேகர் (56). இவர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ததேயுஸ் (54). இவர் தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை அருள் சகாய சேகரின் மகனுக்கு விற்பதாக கூறி அவரிடம் இருந்து இரு தவணைகளாக ரூ.33 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் நிலத்தை எழுதிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அருள் சகாய சேகர் தக்கலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ததேயுஸ் மற்றும் அவரது மனைவி ஜெயிணி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.