கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொல்லங்கோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1.32 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இது தொடர்பான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்மநாதபுரம் உதவி ஆட்சியர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கொல்லங்கோடு பி கிராமத்தில் பஸ் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தின் திட்ட வரைபடம் பத்மநாதபுரம் உதவி ஆட்சியர் அலுவலகம், கிள்ளியூர் தாலுகா அலுவலகம் மற்றும் கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் வேலை நாட்களில் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்யவும் நில அளவுகளை எடுக்கவும் ஆய்வுகள் செய்யவும் சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட தேதியிலிருந்து 60 நாட்களில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியான பத்மநாதபுரம் உதவி ஆட்சியர் இடம் தகவல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.