அருமனை அருகே தோட்டப் பாறவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஜித் (30). தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மனைவி தனது குழந்தையுடன் அஜித்தைப் பிரிந்து சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அஜித் சம்பவ தினம் திடீரென தனது வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160...
பார்வதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி...
கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்
கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான...