அருமனை: கொத்தனார் மயங்கி விழுந்து பலி

0
102

அருமனை அருகே செறியகொல்லா பகுதியை சேர்ந்தவர் ரோபின் (46) கொத்தனார். இவர் நேற்று காலை பிறகு சேகரிப்பதற்காக மாங்கோடு பகுதிக்கு வந்தார். அங்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ரோபினை மீட்டு சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரோபின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு ரோபின் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here