கொல்லங்கோடு அருகே வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (31). தொழிலாளியான இவர் சம்பவ தினம் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு தனது பைக்கை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அடுத்த நாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரிய வந்தது. இது சம்பந்தமாக விஷ்ணு கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுப் போன பைக்கை தேடி வருகின்றனர்.














