கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட எல்ஸா 3 என்ற சரக்கு கப்பல் 640 கண்டைனர்களுடன் கடந்த 24 ஆம் தேதி கடலில் மூழ்கியது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடியில் கண்டைனர் ஒன்று கரை ஒதுங்கியது. உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு படையினர் எட்டு பேர் நேற்று முன்தினம் இரவு வாணியக்குடிக்கு வந்தனர்.
நேற்று காலை முதல் கடலில் மிதக்கும் கண்டைனரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடலோர பாதுகாப்பு படையினரால் அதை மீட்க முடியவில்லை. இதற்கு இடையில் நேற்று மாவட்ட கலெக்டர் அதிகாரி அந்த இடத்தை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இயந்திரத்தை மீட்க குஜராத்திலிருந்து குழுவினர் வாணியக்குடிக்கு வந்து கடலில் கிடக்கும் கண்டைனரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவிலும் தொடர்ந்து கண்டைனரை மீட்கும் பணி நடைபெற்றது.