சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு ஈரான் எச்சரிக்கை

0
202

இந்தியர்கள் 3 பேர் ஈரானில் கடத்தப்பட்ட விவகாரத்தையடுத்து, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பல் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் உள்ளூர் ஏஜென்ட் மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக ஏஜென்ட் உறுதியளித்துள்ளார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஈரான் சென்ற இந்த 3 பேரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று அவர்கள் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி பணம் கேட்கிறது. கடத்தப்பட்டவர்களின் கைகள் கட்டப்பட்டு உடலில் காயங்கள் இருக்கும் படங்கள், வீடியோக்கள் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடத்தப்பட்டவர்கள் சில நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். கடந்த 11-ம் தேதிக்குப்பின் இவர்கள் தொடர்பில் இல்லை.

இந்த விவகாரம் இந்திய தூதரகம் மூலம் ஈரான் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வரும் ஈரான் அரசு, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here