கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 12வது வார்டுக்கு உட்பட்ட அசம்பு ரோடு பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை சீரமைக்கும் பணியை மாநகர மேயர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார். உடன் மண்டலத் தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் அனில் குமார், மாநகர தலைமை செயற்பொறியாளர் ரகுராமன் உதவி செயற்பொறியாளர்கள், மக்கள் நல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.