தக்கலை அருகே ஈத்தவிளைப் பகுதியை சேர்ந்தவர் பிளரான்ஸ். நேற்று முன்தினம் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் அடகு வைத்திருந்த 10 பவுன் நகையை திருப்பி எடுத்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பின்னர் பார்க்கும்போது நகையை ஆட்டோவில் மறந்து வைத்தது தெரிய வந்தது. பின்னர் அழகியமண்டபத்தை சேர்ந்த மற்றொரு ஆட்டா டிரைவர் உதவியுடன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆட்டோ டிரைவர் துரித நடவடிக்கையால் நகையை மறந்து வைத்த ஆட்டோவை கண்டுபிடித்து, நகையை நேற்று பெற்றுக் கொண்டார். நகையை பெற்றுக் கொண்ட பிளரான்ஸ் துரிதமாக செயல்பட்ட அழகிய மண்டபம் ஆட்டோ டிரைவருக்கு நன்றியை தெரிவித்தார்.