15வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், 20 மாத அரியருடன் சம்பளம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில உதவி தலைவர் ஜான் ராஜன் தலைமை வகித்தார்.