நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று பள்ளிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநில தொழிலாளியான ஹிராலால் குமார் (வயது 33) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.