குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல் விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு செல்லவில்லை.
இன்றும் காலை முதல் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று 6-வது நாளாக தொழிலாளர்கள் ரப்பர் தோட்டங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.