‘வகுப்பை தவிர்த்தால் விசாவை இழப்பீர்கள்’ – வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0
166

இந்தியா மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறினால், வகுப்புகளை தவிர்த்தால், பள்ளிக்குத் தெரியாமல் பாடத்திட்டத்தை விட்டு வெளியேறினால் உங்களின் ஸ்டூடண்ட் விசா ரத்து செய்யப்படும். மேலும், எதிர்காலத்தில் வேறு எந்த விசாக்கள் பெறுவதற்கான தகுதிகளையும் இழக்க நேரிடும். அதனால், பிரச்சினைகளைத் தவிர்க்க எப்போதும் உங்களுக்கான விசா விதிமுறைகளை கடைபிடித்து, மாணவர் நிலையை பராமரிக்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், விசாக்களை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச மாணவர்கள் மீதான தங்களின் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முதல் போக்குவரத்து விதிமீறல் என ஒவ்வொரு வழக்குகளுக்கும் காரணங்கள் வேறுபடுகின்றன. இவை மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here