நித்திரவிளை அருகே காணவிளை பகுதியில் ஒரு கடையில் குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தபோது, கடையை ஒட்டியுள்ள வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடையில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுசம்பந்தமாக இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கடை உரிமையாளர் சுதீர் (50) என்பவரை கைது செய்து 12 பாக்கெட் குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர்.














