இலவுவிளை: மார் எப்ரேம் கல்லூரியில தேசியக் கருத்தரங்கம்

0
199

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் நிறுவனம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆலையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து கருத்தரங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறது. 

இதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் பகுதியில் செயல்படும் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் அருட்பணியாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். 

கல்லூரி முதல்வர் முனைவர் லெனின் பிரைட் முன்னிலை வகித்தார். இதில் ஐஆர்இஎல் முதன்மை பொது மேலாளர் மற்றும் ஆலைத் தலைவர் செல்வராஜன் மாணவ மாணவியரிடம் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here