காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிகளில் நுழைந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த தீர செயலில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா சார்பில் குளச்சலில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் கையில் தேசிய கொடி ஏந்தியவாறு குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு பாஜக நிர்வாகிகள் தேசபக்தி முழக்கம் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் குளச்சல் நகர துணைத் தலைவர் கதிரேசன், மாவட்ட நகர பொதுச்செயலாளர் ஜோஸ் மற்றும் பிரபாகர், பாரதிய ஜனதாவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














