நித்திரவிளை அருகே மணக்காலில் சுப்ரமணியசாமி கோயில் உள்ளது. நேற்று காலை பக்தர்கள் கோயிலுக்கு சென்ற போது கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், ஐயப்பன், கிருஷ்ணன், சிவன், துர்கா தேவி மற்றும் முருகன் சன்னதி முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் நான்கு உண்டியல்களை காணவில்லை. இதை பார்த்த பக்தர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் நித்திரவிளை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் வந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் இரண்டு பேர் வந்து, ஒருவர் சுவர் ஏறி குதித்து உண்டியல்களை திருடி விட்டு வெளியே சென்று பைக்கில் ஏறி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.