முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 34-வது நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வட்டார தலைவர் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், தமிழக காங்கிரஸ் பொதுசெயலாளர் ஆஸ்கர் பிரடி, இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.