குமரி மாவட்டத்தில் திருவட்டாறு அருகே அருவிக்கரை என்ற பகுதி உள்ளது. இந்த பெயரைப் போலவே இவ்வூரும் மிகவும் அழகு. இந்த ஊரில் பாய்ந்து வரும் பரளியாறு பார்ப்போர் மனதை கொள்ளை கொள்வதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு சங்கமிக்கின்றனர். இப்பகுதி பல இடங்களில் பாறைகள் நிரம்பியதாகவும், அவை சரிவாக வழுக்கும் தன்மை கொண்டதாகவும், ஆழமான நீரோட்டங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இதனால் இதனை அறியாமல் இங்கு குளிப்பவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஜலசமாதியாகும் நிலை உள்ளது. இவ்வாறு இங்கு தொடர்ந்து பல சம்பவங்களில் அநேகர் இறந்துள்ளனர். இருந்தும் இதனைப் பற்றி அறியாமல் இங்கு வருபவர்கள் ஆற்றுக்கு இரையாகும் அவலம் நடந்தேறி வருகிறது. எனவே இந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையினை காலதாமதம் செய்யாமல் அமைத்திட வேண்டும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நலன்கருதி பாதுகாப்புப் பணியில் போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.