பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படையினர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 70 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் மகன் ஆகாஷ் (22), அதே பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் மெர்பின் (20), மற்றும் புலியூர்குறிச்சி கரும்பாரை பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் மாரியப்பன் (37) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.