திருவட்டார் போலீசார் மணக்காவிளை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 17 கிலோ 850 கிராம் எடை உள்ள புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து கடையின் உரிமையாளர் ஸ்டாலின் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.