செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் வினோதினி (36). இவர் தனியார் மருத்துவமனை டாக்டர். இவரது மகள் நிஷா பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார். நேற்று வினோதினி தனது மகளை பைக்கின் பின்னால் அமர்த்திக் கொண்டு திக்கணங்கோட்டில் உள்ள தனது தங்கையைப் பார்க்கச் சென்றுள்ளார். திக்கணங்கோடு – கருங்கல் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு நிற்கும்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி பைக்கில் மோதியது. இதில் மாணவி நிஷா படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் டாரஸ் லாரி டிரைவர் கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜேக்கப் என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.