தேசிய ஊரகவேலை தொழிலாளர்களின் 5 மாத சம்பள பாக்கி மற்றும் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மிக்கேல் நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் குமரேசன், மாவட்டக் குழு உறுப்பினர் விஜயகுமார், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஜெபமணி, செயலாளர் சொர்ணம் பிள்ளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜகுமார் ஆகியோர் வாழ்த்திபேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.














